» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2பேர் கைது!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:52:26 AM (IST)
தூத்துக்குடியில் எம்ஜிஆர் பூங்கா அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் பாளை., ரோடு எம்ஜிஆர் பூங்கா அருகே ரோந்து சென்றபோது கையில் மஞ்சப்பை உடன் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த வடிவராஜ் மகன் சத்யராஜ் (25), போல்டன் புரத்தைச் சேர்ந்த ஜேசு பிரகாஷ் மகன் நாதன் என்ற செஞ்சிநாதன் (19) என்பதும் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
