» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கதிரடிக்கும் எந்திரம் மோதி விவசாயி பரிதாப சாவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:28:39 AM (IST)
எட்டயபுரம் அருகே, தனது நிலத்தில் மக்காச்சோள அறுவடையை பார்த்து கொண்டிருந்த விவசாயி, எதிர்பாரதவிதமாக கதிரடிக்கும் எந்திரம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கசவன்குன்று வடக்கு தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கருப்பசாமி (48). விவசாயி. இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் விளைச்சலாகி அறுவடைக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து கதிர் அடிக்கும் எந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து, அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த எந்திரத்தை கள்ளக்குறிச்சி புதுவீடுத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகுவேல் (30) என்பவர் இயக்கி வந்தார்.
நேற்று மாலை 3 மணிக்கு கருப்பசாமி நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி நடந்தது. இந்த பணிகளை கருப்பசாமி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அழகுவேல் எந்திரத்தை பின்நோக்கி இயக்கி உள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற கருப்பசாமி மீது எந்திரம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் அழகுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கருப்பசாமிக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், மதன் என்ற கருத்தப்பாண்டி என்கிற மகனும், ராமகமலம் என்கிற மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
