» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
நெல்லையில் மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (87). இவர் நேற்று தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் வந்த 2 மர்ம நபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதைக்கேட்டு பரிதாபம் அடைந்த மூதாட்டி முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் 2 பேரும், திடீரென அந்த மூதாட்டியை அரிவாளால் மிரட்டியதோடு, அவரது கை மற்றும் கால்களை கட்டி உள்ளனர்.
உடனே மூதாட்டி கத்தி கூச்சலிடவே, சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் ஒரு துணியை எடுத்து அமுக்கி வைத்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த பாளை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு நபர் வீட்டுக்குள் நுழையவே மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சில நிமிடங்களில் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர்கள் 2 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக வண்ணார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)

மேயரின் இல்லத்தில் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, மார்ச் 2025 4:16:47 PM (IST)
