» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை - திருச்செந்தூர் ரயில்நிலைய நடைமேடைகள் உயர்த்தும் பணி பிப்.17ல் தொடக்கம்!

சனி 15, பிப்ரவரி 2025 5:58:13 PM (IST)

நெல்லை - திருச்செந்தூர் இடையே 6 ரயில்நிலைய நடைமேடைகள் உயர்த்தும் பணி  பிப்.17ஆம் தேதி காயல்பட்டனத்தில் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நெல்லை - திருச்செந்தூர் இடையேயுள்ள 6 ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணி முன்மொழியப்பட்டு வரும் 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தென்னக ரயில்வேயின் பொறியாளர் பிரிவு இன்று அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

அதன்படி, நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களான பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய  இடங்களில் தற்போதுள்ள தாழ்மட்ட நடைமேடை எண் 1 ஐ உயர்மட்ட நடைமேடையாக உயர்த்தவும், செய்துங்கநல்லூர் நிலையத்தில் நடைமேடை எண் 1 மற்றும் 2 யை உயர்த்தும் வகையில் திருநெல்வேலி சீனியர் பொறியாளர் பிரிவு முன்மொழிந்து, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, வருகிற 17ந் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தும் பணிக்காக இயந்திரங்களைப் பயன்படுத்தி சமாளிப்பு பலகை  மற்றும் சுவர் அகற்றும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற இருப்பதாக தென்னக ரயில்வே பொறியாளர் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது


மக்கள் கருத்து

BalamuruganFeb 16, 2025 - 12:46:20 PM | Posted IP 162.1*****

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தை வி எம் சத்திரத்திற்கு மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory