» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றச்சம்பவங்களை தடுக்க மாவுக்கட்டு போதாது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி!

சனி 15, பிப்ரவரி 2025 5:26:38 PM (IST)



குற்றச்சம்பவங்களை தடுக்க மாவுக்கட்டு போதாது, காவல்துறை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். 

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "சென்னையில் நடைபெற்ற படுகொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. மாவுக்கட்டு போதாது, இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றால் இனிமேல் அடக்காமல் இருக்க முடியாது. ஓரளவுக்குத்தான் சாம பேத தண்டம் சட்டத்தின் மூலம் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றனவோ ஜனநாயக முறைப்படி தடுத்து நிறுத்த வேண்டும் மாவுக்கட்டு இன்னும் வலுவாக போட வேண்டும்.. தமிழ்நாடு மட்டும்தான் பாதுகாப்பான மாநிலம் அனைத்து மாநில மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.

வெளி மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்கு பாதுகாப்பில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் பாதுகாப்பில்லை. தமிழக மட்டும் தான் அமைதி பூங்காவாக வரும் வாழக்கூடிய அமைதியான இருப்பிடமாக இருக்கிறது. என்பதற்கு இதெல்லாம் ஒரு சான்று. பள்ளிகளில் நடைபெறும் பாலில் சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளி வகுப்பறையில் பள்ளிக்கூடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். மூன்றாவது கண் என்கிற சிசிடிவி கேமரா அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை கவுன்சிலிங் மாணவர்களோடு பேச வேண்டும். மாணவிகளோடு பேச வேண்டும், தாய் தந்தையருக்கு பின்பு மாதா குரு என்று சொல்லுகிறார்கள் இப்படிப்பட்ட குருக்களே இப்படி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை  காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வடக்கு மண்டல தலைவர் சேகர்,  கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாநகரச் செயலாளர் இக்னேசியஸ்,கோபால், மாப்பிள்ளையூரணி எட்வர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory