» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒருவர் வெட்டிக் கொலை: பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்!
சனி 15, பிப்ரவரி 2025 8:15:38 AM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக தொழிலாளி ஒருவர், பக்கத்து வீட்டுக்காரரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). கூலித் தொழிலாளி. இவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் சுரேஷ்(40) என்பவருக்கும் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், நேற்று இரவு இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை விட்டுவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து, சுரேஷை தேடி வருகின்றனா். சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)

மேயரின் இல்லத்தில் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, மார்ச் 2025 4:16:47 PM (IST)
