» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் பிப்.15ல் புதிய சந்தை திறப்பு விழா : அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
புதன் 12, பிப்ரவரி 2025 5:26:27 PM (IST)
கோவில்பட்டியில் ரூ.6.87கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகராட்சி தினசரி சந்தையை வருகிற 15ஆம் தேதி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்.

இந்த முடிவின்படி கலைஞர் மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதி ரூ.6.87கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடப் பணிகள் துவக்கப்பட்டன. தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தையானது சுமார் 157 கடைகளைக் கொண்டிருக்கிறது.
புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையை வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி. கீதாஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் ஆய்வு
வியாழன் 13, மார்ச் 2025 9:43:29 PM (IST)

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்
வியாழன் 13, மார்ச் 2025 8:15:38 PM (IST)

நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:11:28 PM (IST)

மேயரின் இல்லத்தில் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, மார்ச் 2025 4:16:47 PM (IST)

Ramaraj. KFeb 14, 2025 - 08:13:09 PM | Posted IP 162.1*****