» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 12:01:15 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினசரி 272 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள் இவர்கள் சுழற்சி முறையில் தினசரி 135 விசை படகுகளில்கடலுக்குள் சென்று வருகிறார்கள் இதற்கிடையே நாளை 10ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், "விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நியாயமான மாற்று தொழில் முறையை அனுமதி பெற்று தராத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையின் கீழே இயங்கி வந்த வருவாய்த்துறை காவல்துறை மெயின் துறை குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு மாற்று தொழிலுக்கான உத்தரவை வழங்காததை கண்டித்தும் பிப்.10 திங்கள் கிழமை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் மேலும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் சுமார் 5ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வெள்ளி 14, மார்ச் 2025 8:35:36 AM (IST)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நிறைவு!
வெள்ளி 14, மார்ச் 2025 8:21:01 AM (IST)

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:13:10 AM (IST)

முன் விரோதத்தில் தாக்கிய வழக்கில் 6 பேர் கைது: தவறி விழுந்ததில் 2 பேருக்கு கை எலும்பு முறிவு
வியாழன் 13, மார்ச் 2025 9:50:47 PM (IST)

உங்களால்Feb 9, 2025 - 02:14:38 PM | Posted IP 162.1*****