» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் : நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:11:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், குமரி மாவட்டம் அரண்மனை இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் இன்னேஷ்குமார் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி எட்டயபுரம் காவல் நிலையத்திற்கும் 

எட்டயபுரம்  காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் நெல்லை மாவட்டம் பனங்குடி காவல் நிலையத்திற்கும், 

கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், மணியாச்சி இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

TutyFeb 9, 2025 - 10:23:04 AM | Posted IP 172.7*****

Yow spelling mistake illama news poduya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory