» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் : பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
திங்கள் 9, டிசம்பர் 2024 8:19:30 AM (IST)
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி-மேல்மருவத்தூர் இடையே பகல் நேர இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பிய மனுவில், "மேல்மருவத்தூரில் வருகின்ற டிசம்பர் 15 முதல் 2025 பிப்ரவரி 11 வரை தைப்பூச சக்தி மாலை இருமுடித் திருவிழா நடைபெறுகிறது. இந்த தைப்பூச திருவிழாவை மட்டும் முக்கியமான ரயில் களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வழங்கி உள்ளீர்கள். இதற்காக எங்கள் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதை முன்னிட்டு தென் மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வழிபாடு செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி செல்ல இருக்கின்றனர். தூத்துக்குடி - சென்னை முத்துநகர் ரயிலில் மேற்க்காணும் நாட்களில் இடம் இல்லாத காரணத்தினால், தூத்துக்குடி -சென்னை - சென்னை- தூத்துக்குடி இடையே பகல் நேர சிறப்பு ரயில்கள் தினசரி இயக்கினால் மிகுந்த வசதியாக இருக்கும். ஆதலால் தயவு செய்து தூத்துக்குடி-மேல்மருவத்தூர்-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.