» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவர் பலி!
திங்கள் 9, டிசம்பர் 2024 8:06:40 AM (IST)
ஆறுமுகநேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் மாரியப்பன் (50). தொழிலாளியான இவர், நேற்று பைக்கில் ஆறுமுகநேரியிலிருந்து நல்லூர் செல்லும் சாலையில் நாகன்னியாபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னாள் சென்ற பைக்கை முந்த முயன்ற போது எதிரே வந்த திருநெல்வேலி - காயல்பட்டினம் அரசுப் பேருந்து, பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.