» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்குப்பீறி தூய மார்க்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
திங்கள் 9, டிசம்பர் 2024 7:48:39 AM (IST)
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது.
மூக்குப்பீறிசேகரதலைவர் ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இதில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கிறிஸ்மஸ் பாடல்கள் பாடினர். அதனை தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு நாடகம் மாணவர்களால் நடித்து காட்டப்பட்டது. இந்த சிறப்பு ஆராதனையில் ஆட்சி மன்ற குழு தலைவர் மற்றும் மூக்குப்பீறி பாஸ்டேட் சேர்மன் ஞான சிங் எட்வின் கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆனந்த ஜோதி பாலன் அருள்மணி .கோயில் ரஜ் மாற்கு மேல்நிலைப்பள்ளி நல கமிட்டி செயலாளர் மோசஸ் கிருபைராஜ் முன்னாள் ராணுவ வீரர் மோசஸ் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்புத்தனர்.
ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் செல்வின் ஆலோசனை பேரில் தலைமை ஆசிரியை ஜூலியட்ஸ் ஜெயசீலி உதவி தலைமை ஆசிரியை செல்வி டார்லிங் ஆசிரியர்கள் ஜெபக்குமாரி ஜேசுடியாள். உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல் ஜாஸ்மின் ஏஞ்சல் குமாரி ஓவியர் ஆசிரியர் காரட். காபிரியேல் மற்றும் ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.