» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மது பதுக்கிய வாலிபர் கைது!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:01:00 PM (IST)
பேய்க்குளத்தில் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
பேய்க்குளம் பஜார் பகுதியில் போலீசை கண்டதும் தலைமறைவான இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் ராமானுஜம்புதூர் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம மகன் சுடலை (32). 25 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.