» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தகராறு செய்து கட்டையால் தாக்கிய 3பேர் கைது!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 12:09:46 PM (IST)
செய்துங்கநல்லூர் அருகே 2பேரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் மூர்த்தி கண்ணன் (48), நடராஜன் மகன் சுகுமார் (55) ஆகிய 2 பேரும் அங்குள்ள கோவில் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அங்கு வந்த 3பேர் அவர்களிடம் தகராறு செய்து 2 பேரையும் கட்டையால் தாக்கினார்களாம்.
இதில் படுகாயம் அடைந்து 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஸ்ரீருவைகுண்டம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் வழக்குப் பதிந்து, புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் செல்லப்பா (48), ஆறுமுகம் மகன் நாராயணன் (46), தங்கராஜ் மகன் முத்துராஜ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.