» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா!
ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:36:40 AM (IST)
தூத்துக்குடியில், ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் 342 வார மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாநகரில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்துகாக்கும் வகையில், ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம் தோறும் ஒவ்வொரு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன்படி இன்று 342வது வாரமான திருச்செந்தூர் பிரதான சாலையில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் மோகன்ராஜ் சாமுவேல் தலைமை தாங்கினார்.
தொழில் அதிபர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இம்மானுவேல் ஆசீர், செந்தில்குமார், மாறன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதப் பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பிரசன்னா, கேசவன், பிரவீன், கமல், திருப்பதி, ராஜன், மைக்கேல், பால விநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்