» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைவு : மக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 8, டிசம்பர் 2024 8:30:55 AM (IST)
தூத்துக்குடியில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஃபென்ஜால் புயலுக்குப் பின்னர் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று நேற்று திரும்பினர். எனினும், மீன்கள்வரத்தும், விலையும் மிகவும் குறைந்திருந்தது. கடந்த வாரம் கிலோ ரூ. 1,200-க்கு விற்பனையான சீலா மீன் நேற்று ரூ. 800-க்கு விற்பனையானது.
ரூ. 500-க்கு விற்பனையான விளை மீன், ஊளி ஆகியவை ரூ. 350, நண்டு ரூ. 500, ஏற்றுமதி ரகம் வாய்ந்த தம்பா, கணவாய், பண்டாரி உள்ளிட்டவை ரூ. 500, சாளை ஒரு கூடை ரூ. 800, வங்கனை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. இதனால், மீனவர்கள் கவலையடைந்தனர். மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.