» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!
சனி 7, டிசம்பர் 2024 3:20:50 PM (IST)
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞரணி, மருத்துவர் அணி சார்பில் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை இணைந்து 2ம் கேட் அருகில் உள்ள எஸ்ஏவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் பல், மற்றும் பொதுமருத்துவம் ஆகிய இரண்டிலும் 600 பேர் பங்கெடுத்துக்கொண்டு பயனடைந்துள்ளனர். இதில் சென்னை கற்பக விநாயகா பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பல் மருத்துவ முகாமில் பல் எடுத்தல், புதிய பல் கட்டுதல், பல் அடைத்தல், பல் சுத்தம் செய்தல், பல் சொத்தை நீக்குதல் ஆகியன இலவசமாகவும் தூத்துக்குடி ஜீவன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பொது மருத்துவமுகாமில் உயரம்ஃஎடை சரிப்பார்த்தல், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இலவச எலும்பு அடர்த்தி ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மேலும் பொது மருத்துவம் மற்றும் எலும்பு ரூ மூட்டு மருத்துவம் பற்றிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கி மருத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜ், அமைப்பாளர் குபேர்இளம்பரிதி, துணைத்தலைவர் அழகர்சாமி, துணை அமைப்பாளர்கள் வெயிலுமுத்து பாரதி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், துணைத்தலைவர் ஜ§டி, அமைப்பாளர் சௌந்தர்ராஜன், துணை அமைப்பாளர் மகிழ்ஜான், மகளிர் அணி தலைவர் தங்கம், அமைப்பாளர் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.