» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!
சனி 7, டிசம்பர் 2024 3:10:47 PM (IST)
தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக துணை முதலமைச்சர் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் பினரயன்ட் நகர் பகுதி திமுக செயலாளர் மாநகராட்சி நகர அமைப்பு குழு தலைவருமான ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் 45வது வார்டு உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியன், கல்யாணி, சிவசுப்பிரமணியன், ரஜினி முருகன், சிம்பு சிவா, ஐயப்பன், விவசாய அணி பெரியநாயகம், நெசவாளர் அணி துரை, நிர்வாகிகள் நாகலிங்கத் தேவர், முருகானந்தம், ராபின்சன், ராபின், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் திமுகவினர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.