» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரிகளில் போதைக்கு எதிரான சங்கங்கள் மூலம் விழிப்புணர்வு : டிஐஜி மூர்த்தி தகவல்

சனி 7, டிசம்பர் 2024 12:31:58 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 69 கல்லூரிகளில் போதைக்கு எதிரான சங்கங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக காவல்துறை தலைவர் மூர்த்தி தெரிவித்தார். 

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மாவட்ட காவல்துறை, எம்பவர் இந்தியா அமைப்புகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 69 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருளுக்கு எதிரான சங்கங்களில் உள்ள கல்லூரி பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஆகியோருக்கு போதைப் பொருள் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. 

இந்த பயிற்சி பட்டறையை நெல்லை சரக காவல்துறை தலைவர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், நகர துணை கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் நெல்லை சரக காவல்துறை தலைவர் மூர்த்தி பேசினார் அப்போது "நெல்லை சரக காவல்துறை சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை சரகத்தில் உள்ள 269 கல்லூரிகளில் போதைக்கு எதிரான சங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன இந்த போதைப் பொருளுக்கு எதிரான கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் அடங்கிய கிளப்புகள் மூலம் நான்கு மாவட்டங்களில் குறைந்தது 10 லட்சம் பேருக்கு போதைப் பொருளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

இப்பொழுது கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த போதைப் பொருள் எதிரான விழிப்புணர்வு சங்கங்கள் அடுத்ததாக பள்ளிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதைத்தொடர்ந்து பொதுமக்களை கொண்டு பல்வேறு அமைப்புகளைக் கொண்டு இந்த சங்கங்கள் உருவாக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போதைப் பொருள் வழக்குகள் குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory