» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

யானை தாக்கி இறந்த பாகன் மனைவிக்கு அரசு பணி : கனிமொழி எம்.பி., ஆணை வழங்கினார்!

சனி 7, டிசம்பர் 2024 12:22:25 PM (IST)



திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இறந்த யானைப் பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை கனிமொழி எம்.பி வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த கடந்த நவம்பர் 18ம்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.  திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமாரின் வீட்டிற்கு நேரில் சென்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

மேலும், உயிரிழந்த யானைப்பாகன் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory