» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுவரிலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
சனி 7, டிசம்பர் 2024 11:49:56 AM (IST)
திருச்செந்தூரில் சுவர் மீது அமர்ந்திருந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஆண் நபர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம், நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் அமீர் அலி மகன் அகமது கான் (58), இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் சுவர் மீது அமர்ந்து இருந்தாராம்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.