» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விஷப் பூச்சி கடித்து 11 வயது சிறுவன் பலி!
சனி 7, டிசம்பர் 2024 11:37:48 AM (IST)
முறப்பநாடு அருகே விஷப் பூச்சி கடித்து சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கீழ புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் பால்ராஜ் (11) கடந்த ஆக.30ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது காலில் ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.