» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமறையூர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கீத பவனி
சனி 7, டிசம்பர் 2024 11:32:55 AM (IST)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் கீத பவனி நடைபெற்றது.
ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளை கொண்டாடும் வண்ணமாக ஆலயத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் அனைத்து சமூக மக்களையும் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 3 நாட்கள் இந்த பவனி நடைபெற்றது.
பவனியில் மறுரூப ஆலயம் பாடகர் குழுவினர் தலைமையில் ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகள். ஆண்களுக்கு சங்கத்தார் பெண்கள் ஐக்கிய சங்கத்தார் என்று எல்லா வயதினரும் உற்சாகமாக பங்கு பெற்று. கிறிஸ்மஸ் பாடல்களை பாடிக்கொண்டு கிறிஸ்மஸ் தாத்தா உடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆலய பணியாளர் ஆபிரகாம், திருமறையூர் சேகர பெருமன்ற உறுப்பினர் ஜெயபால் தேவதாஸ் சேகரச் செயலர் ஜான்சேகர் சேகர பொருளாளர் அகஸ்டின், பாடகர் குழு தலைவர் ஜோயல், கமிட்டி அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை வேத வசனங்களை வாசித்தார். இப்பவனிக்கான ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜான் சாமுவேல்தலைமையில் திருச்சபையினர் செய்திருந்தனர்.