» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறிப்பு : 2பேர் கைது!
சனி 7, டிசம்பர் 2024 11:30:47 AM (IST)
தூத்துக்குடியில் தனியார் ஷிப்பிங் கம்பெனி ஊழியரிடம் செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பிரகாஷ் (23), தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு முள்ளக்காடு ராஜீவ் நகர் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் முள்ளக்காடு ராஜீவ் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (23), இசக்கி முத்து மகன் ராசையா (36) ஆகிய 2பேரும் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.