» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் : கனிமொழி எம்.பி. கோரிக்கை
சனி 7, டிசம்பர் 2024 8:33:22 AM (IST)
சென்னை- தூத்துக்குடி இடையே ‘வந்தே பாரத்' ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே திருத்த மசோதாவில் (2024) கனிமொழி எம்.பி. பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற அனைத்து ரயில்வேக்களை விட தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்பட்ட ரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கிறது. உணவு மற்றும் கழிவறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது மத்திய அரசு ரயில்வே துறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.
இப்படி ரயில்வே துறையை மத்திய அரசு கைகழுவுவது சரியல்ல. எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் கூடுதல் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும். சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் ‘வந்தேபாரத்' ரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் கருத்து
தூத்துக்குடி காரன்Dec 8, 2024 - 02:20:00 PM | Posted IP 162.1*****
வந்தே பாரத் ரயில் விட்டால் தப்பு இல்லை ஆனால் டிக்கெட் 500 முதல் 2000 வரை இருக்கனும்
BabuDec 7, 2024 - 10:57:32 AM | Posted IP 162.1*****
Yen satharana kattanam 300 to 400 kulla train vitta nanga ukanthu poga matoma 1000 rs train than Vida solanuma utha thana Omni bus karanga panranga normal train Vida solunga summa ac fan yellam makkal yar ketanga satharana train covai coimbatore train odala atha oda vaikalam fst atha vitutu vande barath Yara ketanga
தமிழ்ச்செல்வன்Dec 7, 2024 - 10:23:13 AM | Posted IP 172.7*****
வந்தே பாரத் ரயிலினால் ஏழை நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை.....
அது பணக்காரர்களுக்கு உரிய ரயில்....
எம்பி யாருக்காக பேசுகிறார்?
KARNARAJDec 8, 2024 - 03:59:17 PM | Posted IP 162.1*****