» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப்பன்றிகளால் 1,500 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை!
சனி 7, டிசம்பர் 2024 8:17:43 AM (IST)
கோவில்பட்டி அருகே காட்டுப்பன்றிகளால் 1,500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமாகியுள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் மானாவரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயிகளையும் அவை தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1,500 ஏக்கர் வரையிலான கதிர் விளைச்சலுக்கு வந்துள்ள மக்காச்சோளப் பயிர்களை வியாழக்கிழமை இரவு காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.35 முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்குவது மட்டுமன்றி, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
Dr.Y.J.A.Kalai SelvanDec 7, 2024 - 12:44:08 PM | Posted IP 172.7*****