» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு இருக்காது: கனிமொழி எம்பி பேச்சு!

வெள்ளி 6, டிசம்பர் 2024 8:25:29 PM (IST)



வரும் காலங்களில் இங்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் யாருக்கும் செவித்திறன் குறைபாடு என்பதே இருக்காது என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் தூத்துக்குடி மற்றம் Hearing For Life Foundation இணைந்து மேற்கொள்ளும் பச்சிளம் குழந்தைகளுக்கான முன்னோடி திட்டத்தினை இன்று (06.12.2024), தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைகள் செவிப்புலன் பரிசோதனைக்கான முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளன. உலகில் இன்னும் 20 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் ஆறு பேர் செவித்திறன் குறைபாடுடன் இருக்கின்றனர். எனவே குழந்தைகள் பிறந்த உடனே செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்தால் உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களுடைய செவித்திறனை மேம்படுத்த முடியும்.

எனவே, பிறக்கும் குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிவதற்கான பரிசோதனைக்கான சிறப்பு திட்டம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு தலைமை மருத்துவமனைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்த பரிசோதனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளில் காது கேளாமல் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உலக நாடுகளில் இருப்பதை விட ஆறு மடங்கு இந்தியாவில் அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிக குழந்தைகளுக்கு பிறவிலேயே காதுகேளாத பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம், உறவுமுறை திருமணத்தின் காரணமாக இது போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது.

எனவே, இன்று தொடங்கப்பட்டுள்ள பரிசோதனை திட்டத்தால் குழந்தைகளின் செவித்திறனை பரிசோதனை செய்வதன் மூலமாக வரும் காலங்களில் இங்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் யாருக்கும் செவித்திறன் குறைபாடு என்பதை இருக்காது என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், இயக்குநர், சென்னை E.N.T ஆராய்ச்சி மையம் மோகன் காமேஷ்வரன், மாட்ட சுகாதார அலுவலர் ம.யாழினி, இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் (பொ) பொன்ரவி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, Hearing For Life Foundation முனைவர்.ரஞ்சித் ராஜேஸ்வரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory