» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை வீரர்கள் 11பேருக்கு நியமன ஆணை: எஸ்பி வழங்கினார்
வெள்ளி 6, டிசம்பர் 2024 8:11:44 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 11 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 02.12.2024 அன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 11 பேர் மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்படி தேர்வு செய்யப்பட்ட 11 மீனவ இளைஞர் ஊர் காவல் படை வீரர்களுக்கு இன்று (06.12.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.