» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகள்: அரசு கூடுதல் செயலாளர் ஆய்வு
வெள்ளி 6, டிசம்பர் 2024 7:50:31 PM (IST)
தூத்துக்குடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு கூடுதல் செயலாளர் சி.சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (06.12.2024) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு கூடுதல் செயலர் சி.சுரேஷ்குமார் வருகை தந்து, பாரத பிரதமரின் ஜன்விகாஸ் கார்யக்ராம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.136.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஏழு அடுக்கு மாடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகளை, கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி விரைவு படுத்துமாறும், இப்பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஷ்வரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.