» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அதிமுக, மாணவர் சங்கம் மரியாதை!

வெள்ளி 6, டிசம்பர் 2024 4:01:37 PM (IST)



தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டமாமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு,  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், உள்ளிட்ட பிற சார்பு அணிநிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள் செய்திருந்தார்.

இந்திய மாணவர் சங்கம் 



அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம்  தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கௌசி, இமான், ராம்குமார், பிரதீப், சாம், ராஜ், அருண் பாண்டியன், மற்றும் கிளை நிர்வாகிகள் கணேசன், ராஜா, அஜய், பேச்சிமுத்து, மொகத்தின் உள்ளீட்டு பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory