» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்பேத்கர் நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!
வெள்ளி 6, டிசம்பர் 2024 3:10:51 PM (IST)
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 68வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி வர்த்தக காங்கிரஸ், தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ்,டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், வார்டு தலைவர் நேரு, மாநகரச் செயலாளர்கள் இக்னேசியஸ், கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு , மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பிரதீப் தினகரன், சேகர், வழக்கறிஞர் ஸ்டான்லி, பிரேம்நாத், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.