» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் முற்றுகை!
வெள்ளி 6, டிசம்பர் 2024 3:00:53 PM (IST)
திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை கோவில் பிரகாரத்தில் இனிமேல் வியாபாரம் செய்யக்கூடாதென கூறி அராஜகம் செய்யும் கோவில் நிர்வாகம், தனியார் செக்யூரிட்டிகளை கண்டித்து ஹிந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் நூற்றிற்கும் மேலான வியாபாரிகள் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.
நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் G.ஆனந்த், திருச்செந்தூர் நகர தலைவர் M.முத்துராஜ், ஒன்றிய செயலாளர் ராஜு, நகரச் செயலாளர் கிருஷ்ணன், நகர துணைத் தலைவர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்
SUNDARAVEDec 7, 2024 - 10:04:20 AM | Posted IP 162.1*****