» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம் : கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மரியாதை!
வெள்ளி 6, டிசம்பர் 2024 12:27:04 PM (IST)
தூத்துக்குடியில் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.