» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கான்கிரீட் சீட்டுகள் திருட்டு: 2பேர் கைது!
வெள்ளி 6, டிசம்பர் 2024 11:47:21 AM (IST)
காயல்பட்டினத்தில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த 7 கான்கிரீட் சீட்டுகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நியூ காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அப்துல் கனி (34), இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக கான்கிரீட் சீட்டுகளை வீட்டு முன்பு அடுக்கி வைத்துள்ளார். இதில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 7 சீட்டுகள் திருடுபோய் விட்டதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆறுமுகநேரி மங்கள விநாயகர் கோவில் தெருவையை சேர்ந்த மாசாணி மகன் மணிகண்டன் (21), இசக்கிமுத்து மகன் உதயக்குமார் (42) ஆகிய 2பேரும் சேர்ந்து திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, கான்கிரீட் ஷீட்டுகளை பறிமுதல் செய்தனர்.