» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு : 27 பேர் மீது வழக்கு!

வெள்ளி 6, டிசம்பர் 2024 7:53:31 AM (IST)

வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்ததாக 27 பேர் மீது சூரங்குடி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் தரப்பினருக்கும் அதன் அருகிலுள்ள தேவாலய தரப்பினருக்கும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப் பிரச்னை உள்ளதாம். இதுதொடர்பான இரு வழக்குகளில் கோயில் தரப்புக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்தனவாம். இதையடுத்து கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்ட நிலையில், அதை இடித்தும், சிசிடிவி, டிஜிட்டல் போர்டு ஆகியவற்றை உடைத்தும் சேதப்படுத்தினராம். இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தலைவர் எம். காசிராமன் அளித்த புகாரின் பேரில் வேம்பாரை சேர்ந்த ஜான் ஜேம்ஸ், வில்லியம் ஜேம்ஸ், அந்தோணி சந்திரசேகரன், விக்டர் இம்மானுவேல் சேகரன், ஜெபக்குமார், அந்தோணி ராஜ், நடராஜன், யோவான், ராஜ ஜெய பிரபு, எடிசன், ஜான்சன், அருள்ராஜ், சாமுவேல் கிங்ஸ்லி, ஆல்வின், மைக்கேல், சந்திரன், எபனேசர் உள்ளிட்ட 17பேர், இதர நபர்கள் 10 பேர் என 27 பேர் மீது சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். அசம்பாவிதம் தவிர்க்க டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Court orderDec 6, 2024 - 12:51:08 PM | Posted IP 172.7*****

Court orderai mathikkathavargalai, sutrusuvarai idithavargalai kavlathurayinar valakupathivuseyvathodu nindruvidamal kaithu seythu sirayil adaikavendum.

TamilanDec 6, 2024 - 12:49:06 PM | Posted IP 162.1*****

Iru pirivu makkalidaye pathatathai erpaduthiya ivargal meethu Valakkupthivu seythu udanadiyaga kaithu seyyavendum.... Court utharavai udanadiyaga nadaimuraipaduthi sutrusuvar udanadiyaga kattavendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

வியாழன் 26, டிசம்பர் 2024 11:10:18 AM (IST)

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory