» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புயல் நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் : பிரேமலதா விஜயகாந்த்
வெள்ளி 6, டிசம்பர் 2024 7:48:33 AM (IST)
தமிழக முதல்வர், எதிர்க்கட்சிகளை குறைகூறுவதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோருக்கு முழு அளவில் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது : விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சலில் பேசி வீண் விளம்பரம் தேடுவதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி வீசுகின்றனர். திமுக பேனர்கள் கிழிக்கப்படுகின்றன. மக்கள் மறியலில் ஈடுபடுகின்றனர். இந்த அளவில்தான் திமுக ஆட்சி நடைபெறுகிறது.
எனவே, முதல்வர் எதிர்க்கட்சிகளை குறைகூறுவதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோருக்கு முழு அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்கள்Dec 6, 2024 - 12:05:45 PM | Posted IP 172.7*****