» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விழுப்புரம் மக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் : ஆட்சியர் அனுப்பி வைத்தார்!
வியாழன் 5, டிசம்பர் 2024 8:27:40 PM (IST)
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வாகனத்தை ஆட்சியர் இளம்பகவத் வழி அனுப்பி வைத்தார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்க்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சியர் க.இளம்பகவத், இன்று கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.