» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

வியாழன் 5, டிசம்பர் 2024 12:32:33 PM (IST)



தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களின் எண்களும் வருகிற ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலம் முதல் தற்போது வரை இந்த ரயில்கள், பூஜ்யத்தில் தொடங்கும் வண்டி எண்களுடன் கூடிய சிறப்பு ரயில்களாகவே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதியிலிருந்து 296 பயணிகள் ரயில்களும் புதிய எண்களில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06667-க்கு பதிலாக 56721 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06668-க்கு பதிலாக 56722 எனவும்,தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06847-க்கு பதிலாக 56725 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது. வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06672-க்கு பதிலாக 56724, வண்டி எண் 06848-க்கு பதிலாக 56726 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது. 

வாஞ்சிமணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06679-க்கு பதிலாக 56731 எனவும், திருநெல்வேலிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06409-க்கு பதிலாக பதிலாக 56003, வண்டி எண் 06673-க்கு பதிலாக 56728, வண்டி எண் 06675-க்கு பதிலாக 56729, வண்டி எண் 06677-க்கு பதிலாக 56733 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்செந்துரிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06674-க்கு பதிலாக 56004, வண்டி எண் 06405-க்கு பதிலாக 56727, வண்டி எண் 06676-க்கு பதிலாக 56730, வண்டி எண் 06678-க்கு பதிலாக 56734, திருச்செந்துரிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06680-க்கு பதிலாக 56732 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

இதனால் தென்னக ரயில்வேயில் கட்டுப்பாட்டில் உள்ள 296 பயணிகள் ரயில்களின் வண்டி எண்களும் வருகிற ஜனவரி மாதம் 1ந் தேதியிலிருந்து மாற்றம் செயயப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளிட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஹென்றிDec 6, 2024 - 08:22:18 PM | Posted IP 162.1*****

பல முறை பலர் கோரிக்கை வைத்தும் இதுவரை செவிடன் காதில் சங்கு ஊதியது போல் சென்னைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணிக்கும் ரயில்வே துறையை எந்த பட்டியலில் சேர்ப்பது.

BabuDec 5, 2024 - 01:26:22 PM | Posted IP 172.7*****

Theriyama kekuren itha mathi ipo yenna aga pothu? Selavu extra agum vandila number mathura contractor ku yar panam kudpanga ? Yella vandilayum route number puthusa mathi yeluthi athu selavu thana ivanuga summave coachesa kilaka merka nu gate modi modi thoranthu panratha fst stop panumgalen

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory