» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டினமருதூரில் தொன்மங்களை பாதுகாத்து, ஆய்வு நடத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை
வியாழன் 5, டிசம்பர் 2024 11:57:49 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் தொல்லியல் ஆய்வு பகுதிகளை முறையாக அறிவித்து, தொன்மங்களை பாதுகாத்து, ஆய்வு நடத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி 05.11.2024 - 01.12.2024 வரையிலான காலகட்டத்தில் தனது பட்டினமருதூர் கள ஆய்வின் போது கண்டுடெடுக்கபட்டு, ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் விபரங்களை கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
பயன்படுத்திய கல் உளி, முப்பட்டக வடிவ கல் கருவி, நுறைக்கல் செங்கல் போன்ற கல், தகளி உருளை, மணல் கலவையால் செய்யப்பட்ட மிக தொன்மையான பீடம் போன்ற அமைப்பு முதலிய வரலாற்று தொன்மங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இருபுறமும் மெருகூட்டப்பட்ட (Glazing) வண்ண படிகம் (அ) வண்ண முலாம் பூசப்பட்ட மணல் கலவையிலான ஓட்டு சிதைவுகள். அன்றைய கள ஆய்வில் ஊதா, பச்சை நிறங்களில் இருபுறமும் GLAZING முறையில் மெருகூட்டபட்டதை போன்ற மணல் ஓடு சிதைவுகள், மஞ்சள் நிறத்தில் ஒருபுறம் மட்டும் மெருகூட்டபட்டதை போன்ற மணல் ஓடு சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.
பெருங்கற்காலம் (அ) மாண்டிங் குறியீடுகளின் காலகட்டத்தினை ஒத்ததாக நமக்கு உணர்த்துகின்ற மற்பாண்ட சிதைவுகள்: பட்டினமருதூரில் 05.11.2024 மற்றும் 01.12.2024 அன்று கண்டெடுக்கப்பட்ட தொன்மையான குறியீடுகள் கொண்ட மற்பாண்ட சிதைவுகளின் ஒப்பீடுகள் இவற்றின் காலகட்டம் பெருங்கற்காலம் (அ) மாண்டிங் குறியீடுகளின் காலகட்டத்தினை ஒத்ததாக நமக்கு உணர்த்துகின்றன.
பெருங்கற்கால காலகட்டம் --பொ.ஊ.மு 2500 முதல் பொ.ஊ 200 வரை ஆகும் என்றும், மாண்டிங் குறியீடுகள் காலகட்டம் தோராயமாக - பொ.ஊ.மு 4000 முதல் 3000வரை ஆகும் என்றும், இவற்றில் ஒரு குறியீடு மற்பாண்ட தயாரிப்பில் முன்கூட்டிய(Pre-matured) வரையப்பட்ட குறியீடு ஆகும் என்றும், மற்றொன்று தயாரிப்பு முடிந்த பிறகு வரையப்பட்டஎகிப்து மற்றும் மாண்டிங் போன்ற குறியீடு ஆகும் என்றும், மூன்றாம் மற்பாண்ட சிதைவு உள்புறமாக தயாரிப்பின் போது வரையப்பட்ட கிறுக்கல்கள் கோடுகள் ஆகும்.
இது ஒரு வேலை மேல் பூசப்படும் மெருகூட்டல்களின் (Glazing)சிறந்த பிடிமானம் வகைக்கு வரையப்பட்ட கிறுக்கல்களாக இருக்கலாம் அல்லது புதிய இரும்புகால ஆரம்ப நாட்கள் காலகட்டத்தினை சேர்ந்த 'கிட்டாலா பாண்டம்' (KITALA WARE) வகையின் மற்பாண்ட போன்ற சிதைவு என்றும், இது மத்திய ஆப்ரிக்காவில் - காங்கோ நதியின்(Mongo) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரியான தொன்மத்தினை ஒத்ததாக தென்படுகிறது என்றும், புதிய இரும்பு ஆரம்ப காலம்-- பொ.ஊ.மு 1200 - பொ.ஊ.மு 600 என்பதால் இது சுமார் 3000 ஆண்டு பழமையான தொன்மமாக கருதலாம் என்றும், முறையாக அறிவியல் பகுப்பாய்வு செய்ய துல்லியமாக காலகட்டத்தினை கணக்கிடலாம் என்றும், மற்றும் ஓர் மற்பாண்ட சிதைவில் உள்புறம் வெண்ணிற பூச்சு காணப்படுகிறது என்றார்
வரலாற்று நாணயங்கள்: 19மி.மீ விட்டம் கொண்ட 3.4கிராம் எடையுள்ள முதலாம் இராஜராஜன் கால (பொ.ஊ 985) மூன்று செம்பு நாணயங்களும், ஒற்றை எழுத்து கொண்ட 7.5மி.மீ விட்டம் மற்றும் 0.66கிராம் நாணயமும், 13மி.மீ விட்டம் மற்றும் 2.8கிராம் எடையுள்ள பொத்தானை போன்ற செம்பு பொருளும் கண்டெடுக்கப்பட்டன என்றார்.
கண்ணாடி, பீங்கான் மற்றும் கனிம படிக்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன:
01.12.2024 அன்றைய கல் ஆய்வின் போது அமேத்திஸ்ட், கால் சைடு, அப்படைட், மஸ்கோவிட் தாது என்பவை போன்ற கனிம படிகங்களின் சிதைவுகள் பூமியின் மேற்பரப்பில் தென்படுகிறது.
இவை நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவார்ந்த, பண்பட்ட நாகரீகத்தின் தொட்டில் போன்ற கலாச்சார பின்புலத்தில் வாழ்ந்து வந்தனர் என்பது புலனாகிறது. இயற்கை தனது பங்களிப்பை நமக்கு தானாகவே தந்து உதவி வருகிறது. விரைவாக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு, முறையாக அறிவித்து, ஆய்வு நடத்தி இத்தகைய நமது முன்னோர்களின் பண்பட்ட மறைந்த நகர நாகரீகத்தின் உண்மைகளை உலகுணர செய்திட உரத்த குரலில் நாம் அனைவரும் பதிவு செய்திட நம் வரலாறு விரைவாக மீள்வது நிச்சயம்" என தெரிவித்துள்ளார்.