» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை!
வியாழன் 5, டிசம்பர் 2024 10:38:01 AM (IST)
தூத்துக்குடி 18, 19வது வார்டு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திமுக மாவட்ட அலுவலகம் முகாம் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு கண்டு வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 19வது வார்டான மகிழ்ச்சிபுரம், ராஜகோபால் நகர் மற்றும் மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய போது தற்காலிக சாலை அமைத்து தர ஏற்பாடு செய்தார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜான், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.