» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்: மேயா் அனுப்பி வைத்தார்!
வியாழன் 5, டிசம்பர் 2024 10:19:00 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெங்கல் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட பெங்கல் புயலால் விழுப்புரம் கடலூர் மற்றும் திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக கடலூர் மாவட்டத்திற்கு பெங்கல் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பகுதி செயலாளரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் உடனிருந்தனர்.