» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை

புதன் 4, டிசம்பர் 2024 8:24:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அமலிநகரைச் சேர்ந்தவர் அருணா (45). இவர் தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காக முயற்சி செய்து வந்தாராம். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஜெயந்தன் என்பவர், துபையில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறினாராம்.

இதைத் தொடர்ந்து பிளஸ்டன் மற்றும் அவரது நண்பர்கள் லிஜோ, டேனிவாஸ், ஆகாஷ் ராஜன் ஆகியோரை துபையில் வேலைக்கு சேர்க்க முயற்சி செய்து உள்ளனர். இதற்காக ஜெயந்தன் 4 பேரிடமிருந்து மொத்தம் ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

அதன்பிறகு பிளஸ்டன், லிஜோ ஆகிய 2 பேரையும் சுற்றுலா விசாவில் துபைக்கு அனுப்பி உள்ளார். ஆனால் எந்த வேலையும் வாங்கி கொடுக்கவில்லையாம். மற்ற இருவரையும் துபைக்கு அனுப்பவில்லையாம். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணா, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜெயந்தன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்தூத்துக்குடியில் உள்ள ஒரு பெண் உள்பட 3 பேரிடம் துபையில் கப்பலில் வேலைக்கு சேர்த்து விடுவதாக சிவகங்கை மாவட்டம் சீராவயலைச் சேர்ந்த வினோத், தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின் ஆகியோர் கூறி உள்ளனர். இதற்காக 3 பேரிடமும் மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் பணம் வாங்கினராம்.

பின்னர் அவர்களை மும்பை வரை அழைத்து சென்றுவிட்டு, துபைக்கு அனுப்பி வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், றியதாக வினோத், ராபின் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

srinivasanDec 4, 2024 - 04:31:58 PM | Posted IP 162.1*****

people always cheated for their un awareness and worst govt always not guide the people in correct way . this is bad destiny of our country

கிறுக்கன்Dec 4, 2024 - 12:07:23 PM | Posted IP 172.7*****

அந்த பணத்தை வைத்து சொந்தமாக தொழில் செய்து புழைச்சிக்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory