» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் : அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு!

வெள்ளி 1, நவம்பர் 2024 7:42:38 PM (IST)

தூத்துக்குடியில் அஞ்சல் துறை சார்பில் ஓய்வூதியர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி". ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்த படியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD App முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண். PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் https:// ccc. cept.gov.in/ServiceRequest/ request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது "Postinfo" செயலியை பதிவிறக்கம் செய்து ஓய்வூதியதாரர்கள் தங்களின் சேவை கோரிக்கையை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அந்தந்த பகுதி தபல்கரர்கள் மூலம் வீட்டிற்கே வந்து சேவை வழங்கப்படும். இந்த சேவையை வழங்க அனைத்து அஞ்சலகங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கும் சிறப்பு முகாம் நவம்பர் 4ம் தேதி ஏரல், நவம்பர் 8ம் தேதி புதுக்கோட்டை, நவம்பர் 16ம் தேதி ஒட்டப்பிடாரம், நவம்பர் 25ம் தேதி ஆத்தூர் ஆகிய அஞ்சலகங்களில் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory