» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரிடர் அலர்ட் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்

ஞாயிறு 27, அக்டோபர் 2024 9:27:55 AM (IST)

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய TN-ALERT-Mobile செயலியினை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

வடகிழக்குப் பருவமழை 2024 காலத்தில் மழை / வெள்ளம் குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு டி.என்.அலர்ட் (TN-ALERT- Mobile App) என்ற செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி பொதுமக்கள் எளிய முறையில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. TN-ALERT-Mobile App மூலமாக பொது மக்கள் தங்கள் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம்.

இதில் அடுத்தடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்க கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்ய கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த செயலியின் மூலம், வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இலவச தொலைபேசி எண்.1077, 0461 - 2340101 மற்றும் வாட்ஸ்அப் எண்.9486454714 என்ற எண்களில் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
இந்த TN-ALERT செயலியை ”Google Play Store” மற்றும் "IOS App Store” –ல் இருந்து பதவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள TN-ALERT-Mobile செயலியினை பொதுமக்கள் அனைவரும் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியார்கள், அரசுசாரா அமைப்பினர் (NGOs) அனைவரும் பதிவிறக்கம் செய்திட வேண்டும் எனவும், இந்த செயலி நிறுவப்பட்டால் செல்போன் Switch off ஆகி உள்ள நிலையிலும் பேரிடர் காலத்தில் எச்சரிக்கை எழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், மேலும் அந்த எச்சரிக்கை செய்தியினை படித்தால் மட்டுமே அதன் எச்சரிக்கை ஒலி அளவு குறையும் வகையில் உள்ளதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory