» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஏஓ அலுவலகம் முன் விலைப்பட்டியல் போஸ்டர் : சமூக வலைதளங்களில் வைரல்!

வெள்ளி 25, அக்டோபர் 2024 12:22:28 PM (IST)



சாத்தான்குளம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள விலை பட்டியல் சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று காலை கிராம நிர்வாக அலுவலராக சுவரில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல் என சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் 200 ரூபாய் எனவும் இறப்பு, பட்டா சிட்டா என சான்றிதழ் வாங்குவதற்கு ரூபாய் நிர்ணயம் செய்து போடப்பட்டும் கிராம நிர்வாக அலுவலர் பெயர் பதிவு போட்டு அவர் போன் நம்பரை போட்டு ஜிபே பணம் செலுத்தலாம் என சுவரொட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது சமூக வலைத்தளங்களிலும் பரவியது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் ஒட்டப்பட்ட சுவரொட்டி உடனடியாக அப்புறப்படுத்தினர். 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபா கனியிடம் கேட்டபோது யாரோ மர்ம நபர்கள் வேண்டுமென்றே எங்களை கலங்கப்படுத்தும் நோக்கில் சுவரொட்டி ஒட்டி சென்றுள்ளனர். இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

m.sundaramOct 25, 2024 - 07:23:07 PM | Posted IP 162.1*****

It is Dravida Model. for the govt official, by the Govt Official and of the govt official.

m.sundaramOct 25, 2024 - 07:21:14 PM | Posted IP 172.7*****

This is the truth. If you apply through e- center, the operator will inform the applicant to approach VAO for quick action. What is the necessity for this. If the certificate is not received within the stipulated date or if any objection memo is received by the applicant within the stipulated date, penalty whould be imposed to all concerned from VAO to Tasildar.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory