» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி
செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:15:43 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் "வனாமி இறால் வளர்ப்பு" குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி தருவைக்குளத்தில் இன்று "வனாமி இறால் வளர்ப்பு" குறித்த ஒரு நாள் பயிற்சி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 12 பயனாளிகள் பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
இப்பயிற்சியின் நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ), விஜய் அமிர்தராஜ் வரவேற்றார். மீன்வளக் கல்லூரி முதல்வர் ப.அகிலன் தலைமை உரையாற்றினார். அவர் தம் உரையில் இந்தியாவில் இறால் உற்பத்தி மற்றும் அதன் வாயிலாக பெறப்படும் வருவாய் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இறால் வளர்ப்பு சிறந்த லாபம் கொடுக்க கூடிய தொழில் என்றும் எடுத்துரைத்தார். மேலும், பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.