» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத போதகரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு

செவ்வாய் 15, அக்டோபர் 2024 5:24:10 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ போதகரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பண்டார விளை, சுயம்புலிங்க சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன் மகன் ஜெகன் (35), ஆறுமுகநேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாஸ்டராக உள்ளார். இன்று மதியம் 12 மணியளவில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திருச்செந்தூரில் தரிசனம் செய்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, பின்னா் அங்கிருந்து தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் காா்களில் சென்று கொண்டிருந்தனர்.

பழையகாயல் அருகே வரும்போது பாஸ்டர் ஜெகன் காரை,  முன்னாள் அமைச்சர்கள் கார் முந்தி செல்ல முயன்றபோது ஜெகன் வழி விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அவரது காரை விரட்டி வந்து தூத்துக்குடி புதிய துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா அருகே வழிமறித்து நிறுத்தி அவரை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.  அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது முத்தையாபுரம் போலீசார், சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஸ்டர் ஜெகன் செய்தியாளரிடம் கூறும்போது "ஆறுமுகநேரியில் இருந்து நான் காரில் வரும்போது பின்னால் அதிமுகவினர் வழி கேட்டு ஹாரன் அடித்தார்கள். எதிரே வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்ததால் என்னால் வழிவிட முடியவில்லை. ஆனால் திருச்செந்தூர ரோடு ரவுண்டானா அருகே வரும்போது அவர்களது காருக்கு வழி விட்டேன். ஆனால் அவர்கள் எனது காரை சுற்றி வளைத்து என்னை தாக்கினார்கள் என்று கூறினார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

ALLELUYAOct 17, 2024 - 03:35:36 PM | Posted IP 172.7*****

எதிர்கட்சி என்றவுடன் குதிக்கிறீர்கள்??/

JAY JAY ALLELOct 17, 2024 - 12:57:40 PM | Posted IP 172.7*****

எதிர்கட்சி என்றவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள், ஆளும் கட்சி என்றால் வாயை மூடி கொண்டு இருப்பார்கள்.

makkalOct 17, 2024 - 10:30:58 AM | Posted IP 162.1*****

இவர்கள் முன்னாள் அமைச்சர்கள் அல்ல .குண்டர்கள் , ஈவு இரக்கம் இல்லாதவர்கள் மக்களுக்கு எப்படி தொண்டு செய்வார்கள் , அடுத்தமுறை இவர்கள் தேர்தலில் நிற்க தலைமை சீட் கொடுக்கக்கூடாது

UNMAITHANOct 16, 2024 - 03:41:45 PM | Posted IP 172.7*****

இது போல நிறைய இடங்களில் நடக்கும். கார் அல்லது பைக் வழிவிடாமல் சென்றால் பின்னல் வரும் கார் / வேன் ஓட்டுனர்கள் மரியாதை குறைவாக பேசுவது எல்லாம் நடக்கும். இதற்கு ஓட்டுனர்கள் AWARNESS இல்லாததால்தான். இந்த விஷத்தை இப்படி பெரிது படுத்த அவசியமில்லை.

BabuOct 15, 2024 - 08:49:26 PM | Posted IP 172.7*****

Katchi kodiya katipanuga 4 extra horn matipanuga signal la ivanuga horn adichute varuvanuga yellarum odi poiranum vali vitu makkal mela kai vaikuravan kaiya kaval thurai odachutu allakai payalugal sari airuvanuga

VINODOct 15, 2024 - 08:31:49 PM | Posted IP 172.7*****

NEARLY 20Km UNABLE TO ALLOW THE CARS TO OVERTAKE. GOD ONLY KNOWS WHAT HAPPENED

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory