» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை சரக டிஐஜி தலைமையில் காவல்துறை ஆய்வுக் கூட்டம் : தூத்துக்குடி எஸ்பி பங்கேற்பு!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 4:22:11 PM (IST)



திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல் துறைத் துணைத் தலைவர் பா.மூர்த்தி தலைமையில் இன்று (15.10.2024) திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக் காவல் கண்காணிப்பாளர்களும் கானொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மருது சகோதரர்கள் நினைவு தினம் ஆகியவற்ைைற முன்னிட்டு மாவட்டங்களில் செய்யப்படவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் சிறப்பாக காவல் பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 48 பேரைப் பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஏ.சுந்தரவதனம், (கன்னியாகுமாரி), ஆல்பர்ட் ஜான், (தூத்துக்குடி), வி.ஆர். ஸ்ரீனிவாசன், (தென்காசி), சிலம்பரசன், (திருநெல்வேலி), ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory