» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை தசரா திருவிழா சிறப்பு ஏற்பாடுகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!
வியாழன் 10, அக்டோபர் 2024 8:19:41 PM (IST)
குலசேகரபட்டனத்தில் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவில் சூரசம்காரம் 12.10.2024 அன்று நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவதை கருத்தில் கொண்டு திருக்கோயில் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முத்தாரம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், கழிவறைகள் மற்றும் குளியலறைகள், குடிநீர் வசதி, மருத்துவ மையங்கள், மின்சார வசதி, பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கான வரிசை முறை, கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், உதவி காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநர் அன்புமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.