» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரத்தன் டாடா மறைவு: விவசாயிகள் அஞ்சலி!
வியாழன் 10, அக்டோபர் 2024 8:07:45 PM (IST)
பொத்தகாலன்விளையில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவ படத்திற்கு விவசாயிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோல் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் விவசாயிகள் சங்கம் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விவசாயிகள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.